search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா பறிமுதல்"

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு அருண்குமார் மற்றும் ரெயில்வே போலீசார் இன்று அதிகாலை ஒரிசா மாநிலம் ஆட்டியா ரெயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநில மாண்டியா வரை செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயிலின் பின்புறம் உள்ள பொது ஜனரல் பெட்டியில் சந்தேகத்தின் பேரில் அமர்ந்து பயணம் செய்த வாலிபரின் 2 பேக்கை சோதனை செய்தனர். அதில் 2 பண்டல்களில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநில பெங்களூர் மாண்டியா பகுதியைச் சேர்ந்த சுமந்த் (வயது 21)என தெரியவந்தது.

    அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார்.
    • மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    புழல் ஜெயில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மணி என்கிற நீக்ரோ மணி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். இவரை போலீசார் மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் புழல் ஜெயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது ஜெயில் காவலர்கள் சோதனை செய்தபோது மணி 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

    மணிக்கு கஞ்சா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூ ரில் இருந்து தேனிக்கு வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து பஸ் டிரை வரிடம் விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து கஞ்சா மூட்டையை பஸ்சில் ஏற்றி விட்ட நபர்கள், பணம் கொடுத்து தேனியில் இறக்கி வைக்குமாறு கூறியது தெரியவந்தது.

    இதை அடுத்து பஸ் டிரைவரான தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ப வரை கைது செய்தனர். மேலும் ஒரு மூட்டை கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • போலீசாருக்கு பொம்மிடி பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அரூர் மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசாருக்கு பொம்மிடி பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் குக்கல்மலை காட்டு வளைவு பகுதியில் சின்னசாமி என்கிற சின்னவன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து காவல் ஆய்வாளர் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் அரூர் மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் கஞ்சா விற்பவர்களை அடிக்கடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் புதுவைக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரெயில்வே போலீசார் இணைந்து நேற்று மதியம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பையில் 4 பார்சல்கள் இருந்தன. அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை ரெயில் மூலம் புதுவைக்கு கடத்தி வந்தது யார் என்று விசாரணை நடத்தி அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர்.
    • விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார்

    கடலூர்:

    அண்ணாமலை நகர் போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது முத்தையா நகர் பாலம் அருகே வெளிநாட்டு இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டார். அவரை விசாரணை நடத்தி சோதனை செய்து போது 80 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தார். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்திய போது 2020ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்துள்ளார்.அந்த இளைஞர் ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த கிகாளி பகுதியில் வசிக்கும் ஷேமா மன்சி பேப்ரைஸ் (29) என்பது தெரியவந்தது. இவர் மீது போதை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் 2 வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

    • 38 கிலோ சிக்கியது
    • கேரள வாலிபர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    ஜார்க்கண்ட் மாநிலம் ஹத்தியாவிலிருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் காட்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.

    அப்போது திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

    ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது 33 பெட்டியின் இருக்கைக்கு அடியில் 4 பைகளில் 20 பண்டல்களில் 38 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த அல்தாப் நசீர் (வயது 20), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெட்லி (20) என தெரிய வந்தது.

    இவர்கள் இருவரும் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று பெங்களூர் வழியாக கேரளா எடுத்துச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிடிபட்ட வாலிபர்கள் மற்றும் கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.80 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

    • மதுரை அருகே 2¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சமூக விரோதிகள் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து போதிய பலனில்லை. கஞ்சா விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் மது விலக்கு தடுப்பு போலீசார் நேற்று உசிலம்பட்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அணைப்பட்டி அருகே உள்ள கல்யாணிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த மூர்த்தி(26), கல்லூத்தை சேர்ந்த பெருமாள்(52) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு மோட்டார் சைக்கிளை சோதனையிட் போது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிதல் செய்த போலீசார் மூர்த்தி,பெருமாளை கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டியை சேர்ந்த செல்லபாண்டி(45) என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மதுவிலக்கு போலீசார் அதனை பறிமுதல் செய்து செல்லபாண்டியை கைது செய்தனர்.

    • 19 கிலோ சிக்கியது
    • பீகார் வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 1 வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது சிறப்பு தனி படை பிரிவினர் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது முன் பதிவு செய்யப்பட்ட எஸ் 14 இருக்கையின் அடியில் இருந்த பேக் ஒன்றை சோதனை செய்தபோது.

    அதில் 19 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருக்கையின் அருகே அமர்ந்திருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    இவர் பீகார் மாநிலம் நிர்பூர் அடுத்த காஸ்மாரா பகுதியை சேர்ந்த சங்கர் பிரசாத் மந்தர் என்பவரின் மகன் அமித் குமார் (வயது 21) என்பதும், இவர் பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்று அங்கு கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பீகார் மாநில வாலிபரை கைது செய்து ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • மதுரையில் கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
    • இவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.



    மதுரை

    மதுரை கரிமேடு போலீசார் பெத்தானியாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த சந்தானம் மனைவி லட்சுமி என்ற சித்ரா (வயது 32), சுந்தரபாண்டியன் மனைவி லதா (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதியில் உதவி கமிஷனர் ஜெகநாதன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றி ருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (23), சுபாஷ் சரவணன் (21), மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து 245 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை மாநகரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    வட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்களின் மூலம் தமிழ கத்திற்கு கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலை தடுக்கும். வகையில் ரெயில்களிலும், ரெயில் நிலையத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் அரக்கோ ணம் ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமை யில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தபோது சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து வழக் குப்பதிந்து கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
    • கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு தடை செய்யப்பட்ட குட்கா, லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ந்தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 3/4 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் தீவிர சோதனையில் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதில் கஞ்சா விற்பனை செய்ததாக 20 நபர்களும், குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 19 நபர்களையும், லாட்டரி விற்பனை செய்ததாக 10 நபர்களையும் என 49 பேர் போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் சோதனையும் மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×